• Nov 07 2025

மன்னாரிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

shanuja / Oct 7th 2025, 4:19 pm
image

யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வடமாகாண  சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.


 குறித்த பணிப்புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.


 மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) சட்டத்தரணிகள் சமூகமளிக்காது பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவம் எதிர் காலத்தில் இடம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ளனர்.


இதனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மன்னாரில் நீதிமன்ற செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,இன்றைய நாளுக்கான வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.


மன்னாரிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வடமாகாண  சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பணிப்புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) சட்டத்தரணிகள் சமூகமளிக்காது பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவம் எதிர் காலத்தில் இடம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ளனர்.இதனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மன்னாரில் நீதிமன்ற செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,இன்றைய நாளுக்கான வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement