வீதியை விட்டு விலகிய டிப்பர் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சாரதி சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் 3 ஆம் கட்டை மலையடி சந்தியில் இன்று செய்வாய்கிழமை (07) இடம்பெற்றது.
குறித்த வீதியால் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் திடீரென தடம்புரண்டு வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது.
விபத்துச் சம்பவத்தில் டிப்பர் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் வீதிகளில் சேறு, சறுக்கல் உள்ளதால் டிப்பர் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர்; சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய சாரதி வீதியை விட்டு விலகிய டிப்பர் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் சாரதி சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் 3 ஆம் கட்டை மலையடி சந்தியில் இன்று செய்வாய்கிழமை (07) இடம்பெற்றது. குறித்த வீதியால் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் திடீரென தடம்புரண்டு வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது. விபத்துச் சம்பவத்தில் டிப்பர் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் வீதிகளில் சேறு, சறுக்கல் உள்ளதால் டிப்பர் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.