• Nov 07 2025

ஏர் இந்தியா விமான விபத்தை சித்தரிக்கும் பூஜை அலங்காரம்; தசரா பண்டிகை ஏற்பாட்டில் சர்ச்சை!

shanuja / Oct 7th 2025, 3:33 pm
image

கொல்கத்தாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு குஜராத் ஏர் இந்தியா விமான விபத்தை சித்தரிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள அலங்காரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



குஜராத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் புறப்பட்ட விநாடிகளிலேயே அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி மீது விழுந்து நொருங்கி விபத்திற்குள்ளானது.



விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் ஒரு பயணியைத் தவிர 241 பயணிகளும் உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் உயிரிழந்ததுடன் பல மாணவர்கள் காயமடைந்தனர். 


உலகத்தையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பின்னர் விமானத்தில் பயணிக்கும் மக்கள் பெரும் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். ஏனெனில் ஏர் இந்திய விமான விபத்திலிருந்து இன்னும் மக்களால் மீள முடியவில்லை. 


இவ்வாறிருக்க கொல்கத்தாவில் இடம்பெறும் தசரா பண்டிகையில் இம்முறை ஏர் இந்தியா விமான விபத்தை சித்தரிக்கும் வகையில் துர்கா பூஜை அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


எவ்வாறெனின் ஏர் இந்தியா விமானம் போன்ற வடிவமைப்பில் விமானம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன் ஒரு புறத்திலிருந்து மறுபுறமுள்ள கட்டடத்தில் மோதும் வகையில் விமானத்தை செயற்படுத்தியுள்ளனர். 


அத்துடன் விமானம் மோதி சுழன்று விழுவதும் தொழில்நுட்பம் ஊடாக செயற்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 


ஏர் இந்தியா விமான விபத்திலிருந்து மீள முடியாத நிலையிலுள்ள மக்களுக்கு மீண்டும் குறித்த விபத்தை நினைவுபடுத்தும் வகையில் கொல்கத்தாவில் துர்க்கா பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த பூஜை அலங்காரம் தொடர்பில் பல்வேறு ரீதியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பலவாறாக சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தை சித்தரிக்கும் பூஜை அலங்காரம்; தசரா பண்டிகை ஏற்பாட்டில் சர்ச்சை கொல்கத்தாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு குஜராத் ஏர் இந்தியா விமான விபத்தை சித்தரிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள அலங்காரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் புறப்பட்ட விநாடிகளிலேயே அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி மீது விழுந்து நொருங்கி விபத்திற்குள்ளானது.விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் ஒரு பயணியைத் தவிர 241 பயணிகளும் உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் உயிரிழந்ததுடன் பல மாணவர்கள் காயமடைந்தனர். உலகத்தையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பின்னர் விமானத்தில் பயணிக்கும் மக்கள் பெரும் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். ஏனெனில் ஏர் இந்திய விமான விபத்திலிருந்து இன்னும் மக்களால் மீள முடியவில்லை. இவ்வாறிருக்க கொல்கத்தாவில் இடம்பெறும் தசரா பண்டிகையில் இம்முறை ஏர் இந்தியா விமான விபத்தை சித்தரிக்கும் வகையில் துர்கா பூஜை அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறெனின் ஏர் இந்தியா விமானம் போன்ற வடிவமைப்பில் விமானம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன் ஒரு புறத்திலிருந்து மறுபுறமுள்ள கட்டடத்தில் மோதும் வகையில் விமானத்தை செயற்படுத்தியுள்ளனர். அத்துடன் விமானம் மோதி சுழன்று விழுவதும் தொழில்நுட்பம் ஊடாக செயற்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்திலிருந்து மீள முடியாத நிலையிலுள்ள மக்களுக்கு மீண்டும் குறித்த விபத்தை நினைவுபடுத்தும் வகையில் கொல்கத்தாவில் துர்க்கா பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜை அலங்காரம் தொடர்பில் பல்வேறு ரீதியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பலவாறாக சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement