• Oct 31 2024

கிண்ணியாவில் நீரிழிவு நோய் தொடர்பான இலவச வைத்திய முகாம்..!

Sharmi / Oct 31st 2024, 10:33 am
image

Advertisement

கிண்ணியாவில் நீரிழிவு நோய் சிகிச்சை தொடர்பான இலவச வைத்திய முகாம் ஒன்று நேற்றையதினம்(30) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதனை கிண்ணியா நகர சபையும் கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, நீரிழிவு நோய்க்கு தேவையான பரிசோதனைகளுடன் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், நீரிழிவு நோய் தொடர்பான மக்களுக்கு விழிப்புணர்வுடன் தொடர்பான தெளிவூட்டல்களும் கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி A. W. M. மாஸாத்தினால் வழங்கப்பட்டன.

தொற்றா நோய்கள் தொடர்பாக, மக்கள் மத்தியில் நிலவிவரும், மாற்று கருத்துக்களுக்கு, தெளிவைப் பெற்றுக் கொடுத்து, அதன் மூலம் அரச ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் மக்கள் நாட வேண்டும் என்பதற்காக இந்த இலவச வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டது என்று இதன் போது வைத்திய அதிகாரி மாஸாத் தெரிவித்தார்.


கிண்ணியாவில் நீரிழிவு நோய் தொடர்பான இலவச வைத்திய முகாம். கிண்ணியாவில் நீரிழிவு நோய் சிகிச்சை தொடர்பான இலவச வைத்திய முகாம் ஒன்று நேற்றையதினம்(30) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதனை கிண்ணியா நகர சபையும் கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது, நீரிழிவு நோய்க்கு தேவையான பரிசோதனைகளுடன் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், நீரிழிவு நோய் தொடர்பான மக்களுக்கு விழிப்புணர்வுடன் தொடர்பான தெளிவூட்டல்களும் கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி A. W. M. மாஸாத்தினால் வழங்கப்பட்டன.தொற்றா நோய்கள் தொடர்பாக, மக்கள் மத்தியில் நிலவிவரும், மாற்று கருத்துக்களுக்கு, தெளிவைப் பெற்றுக் கொடுத்து, அதன் மூலம் அரச ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் மக்கள் நாட வேண்டும் என்பதற்காக இந்த இலவச வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டது என்று இதன் போது வைத்திய அதிகாரி மாஸாத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement