• Apr 25 2026

வாகனப் பதிவு முதல் காணி உறுதி வரை: ஏப்ரல் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்!

Chithra / Mar 3rd 2026, 9:24 am
image

 

இலங்கையில் எதிர்வரும் 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், முக்கியமான பல நிதி மற்றும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துவோர் TIN சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


2026 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.


புதிய சட்டத்தின்படி, பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது செல்லுபடியாகும் TIN சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்:


நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்தல், கடன் அட்டைகளை (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல், காணிகளைப் பதிவு செய்தல் அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்துதல், கட்டிடத் திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், மோட்டார் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை (Vehicle License) புதுப்பித்தல், புதிய வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை (Shares) கைமாற்றுதல். (வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் இது பொருந்தும்).


வர்த்தமானி அறிவித்தலின்படி, வங்கி மேலாளர்கள், பதிவாளர்கள், மாகாண அல்லது பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், தத்தமது சேவைகளை வழங்குவதற்கு முன்னர் விண்ணப்பதாரரின் TIN சான்றிதழை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.


வரி செலுத்தும் முறையை முறைப்படுத்துவதற்காகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வாகனப் பதிவு முதல் காணி உறுதி வரை: ஏப்ரல் முதல் TIN சான்றிதழ் கட்டாயம்  இலங்கையில் எதிர்வரும் 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், முக்கியமான பல நிதி மற்றும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துவோர் TIN சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.2026 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.புதிய சட்டத்தின்படி, பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது செல்லுபடியாகும் TIN சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்:நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்தல், கடன் அட்டைகளை (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல், காணிகளைப் பதிவு செய்தல் அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்துதல், கட்டிடத் திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், மோட்டார் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை (Vehicle License) புதுப்பித்தல், புதிய வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை (Shares) கைமாற்றுதல். (வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் இது பொருந்தும்).வர்த்தமானி அறிவித்தலின்படி, வங்கி மேலாளர்கள், பதிவாளர்கள், மாகாண அல்லது பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், தத்தமது சேவைகளை வழங்குவதற்கு முன்னர் விண்ணப்பதாரரின் TIN சான்றிதழை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.வரி செலுத்தும் முறையை முறைப்படுத்துவதற்காகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement