• Mar 04 2025

விநியோகத்தர்களுக்கான கழிவை நீக்காமல் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம் - ரொஷான் கருத்து

Chithra / Mar 2nd 2025, 12:29 pm
image


அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாமல் எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கும் கழிவை நீக்குவதற்கு முயற்சிப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மூளையால் வேலை செய்வதற்காக ஆட்சிக்குக் கொண்டு வரவில்லை எனவும், பேச்சில் ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இது தொடர்பில் குறிப்பிட்டார். 

3 வீதத்தை நீக்குவதெனில் மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும். 

ஒரு லீற்றர் எரிபொருள் விலையை 9 ரூபாவால் குறைத்திருக்க வேண்டும். இங்கும் பொய் தானே கூறுகிறார்கள். 

இந்த நாட்டு மக்கள் எருமை மாடுகள் என நினைத்தீர்களா? மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாமல் அந்த எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படும் தொகையிலும் எவ்வளவு சரி கொள்ளையடிக்கத் தான் பார்க்கிறார்கள். 

மூளையால் வேலை செய்ய வேண்டியதை உடலால் செய்ய முடியாது தானே. மூளையால் வேலை செய்யத் திசைக்காட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லையே. 

150 ரூபாய்க்கு எரிபொருள் வழங்கத் தானே வந்தது. 

நாட்டை இப்படிச் சரி இழுத்துச் செல்வதற்கு ஜனாதிபதியின் பேச்சாற்றலே காரணமாகும். 

பேச்சில் ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டால் சரி என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறினார்

விநியோகத்தர்களுக்கான கழிவை நீக்காமல் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம் - ரொஷான் கருத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாமல் எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கும் கழிவை நீக்குவதற்கு முயற்சிப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மூளையால் வேலை செய்வதற்காக ஆட்சிக்குக் கொண்டு வரவில்லை எனவும், பேச்சில் ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இது தொடர்பில் குறிப்பிட்டார். 3 வீதத்தை நீக்குவதெனில் மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும். ஒரு லீற்றர் எரிபொருள் விலையை 9 ரூபாவால் குறைத்திருக்க வேண்டும். இங்கும் பொய் தானே கூறுகிறார்கள். இந்த நாட்டு மக்கள் எருமை மாடுகள் என நினைத்தீர்களா மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாமல் அந்த எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படும் தொகையிலும் எவ்வளவு சரி கொள்ளையடிக்கத் தான் பார்க்கிறார்கள். மூளையால் வேலை செய்ய வேண்டியதை உடலால் செய்ய முடியாது தானே. மூளையால் வேலை செய்யத் திசைக்காட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லையே. 150 ரூபாய்க்கு எரிபொருள் வழங்கத் தானே வந்தது. நாட்டை இப்படிச் சரி இழுத்துச் செல்வதற்கு ஜனாதிபதியின் பேச்சாற்றலே காரணமாகும். பேச்சில் ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டால் சரி என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறினார்

Advertisement

Advertisement

Advertisement