நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
துறைமுக அதிகாரிகளின் தகவல்படி, முதலாவது கப்பலில் 20,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 20,000 மெட்ரிக் டொன் டீசல் இரண்டாவது கப்பலில் 35,300 மெட்ரிக் தொன் பெட்ரோல் என்பன இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், தலா 37,000 மெட்ரிக் டொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் இந்த மாத இறுதியில் வருகை தரவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கையிருப்பு மற்றும் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் எதிர்வரும் ஜூலை மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான அளவு விநியோகம் தொடர்கின்றது. கையிருப்பு நிலை சீராக உள்ளதால், தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள்- QR ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டம் நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.துறைமுக அதிகாரிகளின் தகவல்படி, முதலாவது கப்பலில் 20,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 20,000 மெட்ரிக் டொன் டீசல் இரண்டாவது கப்பலில் 35,300 மெட்ரிக் தொன் பெட்ரோல் என்பன இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேலும், தலா 37,000 மெட்ரிக் டொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் இந்த மாத இறுதியில் வருகை தரவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள கையிருப்பு மற்றும் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் எதிர்வரும் ஜூலை மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான அளவு விநியோகம் தொடர்கின்றது. கையிருப்பு நிலை சீராக உள்ளதால், தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.