• Nov 19 2024

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் கஜேந்திரகுமார் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம்..!

Sharmi / Nov 19th 2024, 5:26 pm
image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் (19)  முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று  மலர்தூவி அஞ்சலி  செலுத்தியிருந்தார்.

இன்று(19) பிற்பகல் 12.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதனை தொடர்ந்து, இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று  சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தி உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இனவழிப்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த அஞ்சலியின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் கஜேந்திரகுமார் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் (19)  முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று  மலர்தூவி அஞ்சலி  செலுத்தியிருந்தார்.இன்று(19) பிற்பகல் 12.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதனை தொடர்ந்து, இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று  சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தி உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இனவழிப்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.குறித்த அஞ்சலியின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement