கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பளை நகரில் உள்ள அரச தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து நிலையத்திற்கு உரித்தான மாகாண சபை அதிகாரிகள் மற்றும் கம்பளை நகர சபை அதிகாரிகள் பேருந்து நிலையத்தை கவனம் செலுத்தவில்லை என பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், சாரதிகள், நடத்துனர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அந்த பேருந்து தரிப்பிடத்தில் பல பகுதிகளில் பாரிய அளவில் உக்கும் உக்கா பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பல வாரங்களுக்கு மேல் இந்த நிலையில் பேருந்து நிலையம் உள்ளத.
இதன் காரணமாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பாடசாலை மாணவர்கள் நோயாளிகள் கர்ப்பிணிகள் மற்றும் அங்கு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் வந்து செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடன் அந்த பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சுகாதார சீர் கேட்டுடன் இயங்கும் கம்பளை பேருந்து நிலையம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பளை நகரில் உள்ள அரச தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து நிலையத்திற்கு உரித்தான மாகாண சபை அதிகாரிகள் மற்றும் கம்பளை நகர சபை அதிகாரிகள் பேருந்து நிலையத்தை கவனம் செலுத்தவில்லை என பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், சாரதிகள், நடத்துனர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அந்த பேருந்து தரிப்பிடத்தில் பல பகுதிகளில் பாரிய அளவில் உக்கும் உக்கா பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பல வாரங்களுக்கு மேல் இந்த நிலையில் பேருந்து நிலையம் உள்ளத. இதன் காரணமாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பாடசாலை மாணவர்கள் நோயாளிகள் கர்ப்பிணிகள் மற்றும் அங்கு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் வந்து செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடன் அந்த பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.