கணேமுல்ல சஜ்சீவவின் படுகொலை தொடர்பில் கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கரளையும் மேலதிக விசாரணைகளுக்காக 24 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் இன்று (23) கொழும்பு, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே போதே இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.
கணேமுல்ல சஜ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பாக இருவரும், குறித்த வன்முறை சம்பவத்துக்கு துப்பாக்கியை வழங்கியமைக்காக மற்றைய நபரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சந்தேக நபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல, சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதியளித்ததுடன், அதன் முன்னேற்றத்தை நீதிமன்றில் அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை - கைதான நபர்களுக்கு 24 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு கணேமுல்ல சஜ்சீவவின் படுகொலை தொடர்பில் கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கரளையும் மேலதிக விசாரணைகளுக்காக 24 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்கள் மூவரும் இன்று (23) கொழும்பு, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே போதே இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.கணேமுல்ல சஜ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பாக இருவரும், குறித்த வன்முறை சம்பவத்துக்கு துப்பாக்கியை வழங்கியமைக்காக மற்றைய நபரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்த சந்தேக நபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல, சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதியளித்ததுடன், அதன் முன்னேற்றத்தை நீதிமன்றில் அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.