• Nov 23 2024

மக்களை அலைக்கழிக்கும் காங்கேசந்துறை துறைமுக சுங்கபிரிவு

Tharmini / Oct 31st 2024, 10:37 am
image

நாகபட்டினம் காங்கேசன் துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசந்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் மக்களை திட்டமிட்டு தாமதப்படுத்து செயற்பாடுகளிலும் சுங்க அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்

குறிப்பாக காங்கேசந்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரனைகள் மேற்கொள்வதாகவும் நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்

அடிப்படை வசதிகள் அற்ற அமர்வதற்கு கதிரைகள் கூட அற்ற காத்திருக்கும் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் மலசல கூட வசதிகள் கூட ஒழுங்குபடுத்தப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்

அதே நேரம் சில பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பதாகவும் வரியில் பாதி அளவிலான தொகைக்கே பற்று சீட்டு வழங்குவதாகவும் மீதி தொகைக்கு பற்றுசீட்டு வழங்குவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்

மேலும் இலங்கையில் பழங்களின் விலைகள் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் சிறிய அளவிலான பழங்களை கூட அதிகாரிகள் அபகரித்து கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

தொடர்சியாக நாகப்பட்டினம் காங்கேசந்துறை ஊடாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வர்தகர்கள் என அனைவரும் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர் என்பதுடன் தொழில்ரீதியாக இந்தியா செல்பவர்களிடம் நேரடியாக சுங்க அதிகாரிகளால் இலஞ்சம் கோரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




மக்களை அலைக்கழிக்கும் காங்கேசந்துறை துறைமுக சுங்கபிரிவு நாகபட்டினம் காங்கேசன் துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசந்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் மக்களை திட்டமிட்டு தாமதப்படுத்து செயற்பாடுகளிலும் சுங்க அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்குறிப்பாக காங்கேசந்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரனைகள் மேற்கொள்வதாகவும் நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்அடிப்படை வசதிகள் அற்ற அமர்வதற்கு கதிரைகள் கூட அற்ற காத்திருக்கும் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் மலசல கூட வசதிகள் கூட ஒழுங்குபடுத்தப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்அதே நேரம் சில பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பதாகவும் வரியில் பாதி அளவிலான தொகைக்கே பற்று சீட்டு வழங்குவதாகவும் மீதி தொகைக்கு பற்றுசீட்டு வழங்குவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்மேலும் இலங்கையில் பழங்களின் விலைகள் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் சிறிய அளவிலான பழங்களை கூட அதிகாரிகள் அபகரித்து கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்தொடர்சியாக நாகப்பட்டினம் காங்கேசந்துறை ஊடாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வர்தகர்கள் என அனைவரும் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர் என்பதுடன் தொழில்ரீதியாக இந்தியா செல்பவர்களிடம் நேரடியாக சுங்க அதிகாரிகளால் இலஞ்சம் கோரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement