• Dec 10 2025

அரச பேருந்து இல்லாமல் அல்லாடும் க.பொ.த.உயர்தர மாணவர்கள் !

shanuja / Nov 15th 2025, 2:57 pm
image

நுவரெலியா மாவட்டத்தில்  உள்ள மஸ்கெலியா  மறே  பிரதேச அரச பேருந்தின்  சேவை  கடந்த ஒரு மாதமாக  காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த சாலை ஊடாக ஒரே ஒரு அரச பேருந்து சேவையில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஒரு மாதமாக அந்த பேருந்து சேவையில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மறே பகுதியில் 14 தோட்ட பிரிவில் உள்ள மக்கள் மற்றும் நல்லதண்ணி ரிக்கார்டன் நகர கிராமங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பயணிகள், நோயாளிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் பருவகால சீட்டினை பெற்று தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது

கடந்த மாதம் அந்த பேருந்து சாரதி  பொலிசாரால் ஹேரோயின் மற்றும் போதை வில்லைகள் வைத்து இருந்த குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அந்த பேருந்து சாரதிக்கு மாறாக சாரதி ஒருவர் இல்லாத காரணத்தால் அந்த பேருந்து சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

இப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணிகள் இந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் .

அரச பேருந்து இல்லாமல் அல்லாடும் க.பொ.த.உயர்தர மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்தில்  உள்ள மஸ்கெலியா  மறே  பிரதேச அரச பேருந்தின்  சேவை  கடந்த ஒரு மாதமாக  காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.அந்த சாலை ஊடாக ஒரே ஒரு அரச பேருந்து சேவையில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஒரு மாதமாக அந்த பேருந்து சேவையில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.இதனால் மறே பகுதியில் 14 தோட்ட பிரிவில் உள்ள மக்கள் மற்றும் நல்லதண்ணி ரிக்கார்டன் நகர கிராமங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பயணிகள், நோயாளிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் பருவகால சீட்டினை பெற்று தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவதுகடந்த மாதம் அந்த பேருந்து சாரதி  பொலிசாரால் ஹேரோயின் மற்றும் போதை வில்லைகள் வைத்து இருந்த குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.அதன் பின்னர் அந்த பேருந்து சாரதிக்கு மாறாக சாரதி ஒருவர் இல்லாத காரணத்தால் அந்த பேருந்து சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.இப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணிகள் இந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement