இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியாவார் என மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது பாட்டியுடன் குறித்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவத்திற்கு குறித்த சிறுதி முகம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது.
எனினும், குறித்த சிறுமி மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலை இழுத்துச் செல்லப்பட்டு சிறுமி உயிரிழப்பு அனுராதபுரம் -மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் முதலை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (19) நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியாவார் என மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது பாட்டியுடன் குறித்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவத்திற்கு குறித்த சிறுதி முகம் கொடுத்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. எனினும், குறித்த சிறுமி மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.