• Sep 30 2024

சகோதரியை காதலன் விட்டுச் சென்றதால் யுவதி உயிர்மாய்ப்பு - யாழில் சம்பவம்!

Tamil nila / Sep 29th 2024, 10:06 pm
image

Advertisement

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இதன் போது கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லோஜினி  என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் சகோதரி அவரது காதலனுடன் சென்றுள்ளார். பின்னர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்து பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் பிரிந்து சென்ற சகோதரி நேற்றையதினம் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தாயார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்றவேளை, வீட்டில் இருந்த மகள் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


சகோதரியை காதலன் விட்டுச் சென்றதால் யுவதி உயிர்மாய்ப்பு - யாழில் சம்பவம் யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன் போது கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லோஜினி  என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் சகோதரி அவரது காதலனுடன் சென்றுள்ளார். பின்னர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்து பிரிந்து சென்றனர்.இந்நிலையில் பிரிந்து சென்ற சகோதரி நேற்றையதினம் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.தாயார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்றவேளை, வீட்டில் இருந்த மகள் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement