• Nov 28 2024

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்குப் பிணை! நீதிமன்றம் உத்தரவு

Chithra / Jul 18th 2024, 11:47 am
image


நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணையில் தேரரை விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டார். 

எனினும், ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல தடைவிதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது

இதேவேளை அண்மையில் இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும்,

அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என பிரதான மதகுருக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்குப் பிணை நீதிமன்றம் உத்தரவு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணையில் தேரரை விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டார். எனினும், ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல தடைவிதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்ததுஇதேவேளை அண்மையில் இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும்,அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என பிரதான மதகுருக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement