கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முட்டையின் விலை 60-70 ரூபா வரையில் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்நிலையில் பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து சதொச விற்பனை நிலையங்கள் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.
இதனால் பண்டிகைக்காலத்தில் மக்கள் தட்டுப்பாடின்றி முட்டைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில், மேலும் 8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (28) முதல் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இன்று முதல் அமுலுக்கு.samugammedia கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முட்டையின் விலை 60-70 ரூபா வரையில் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இந்நிலையில் பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து சதொச விற்பனை நிலையங்கள் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.இதனால் பண்டிகைக்காலத்தில் மக்கள் தட்டுப்பாடின்றி முட்டைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்பட்டது.இவ்வாறானதொரு நிலையில், மேலும் 8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (28) முதல் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.