அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்திருந்த போதும் அவை இதுவரையிலும் நடைமுறைக்கு வரவில்லை.
அவர் ஆட்சிக்கு வந்து 14 நாட்களுக்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரைக் கொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருந்தது.
அங்கு வந்திருந்த குழுவினர் கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றும் நோக்குடன் வரவில்லை எனவும் அவரை கொலை செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்ததை தாம் நன்கு அறிவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு வருகை தந்தவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளது.
எனவேதான் தற்போதைய அரசாங்கம் ஒரு அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே தாம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
கோட்டாபயவை கொலை செய்ய எடுத்த முயற்சி - முன்னாள் பிரத்தியேக செயலாளர் பரபரப்பு தகவல் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்திருந்த போதும் அவை இதுவரையிலும் நடைமுறைக்கு வரவில்லை. அவர் ஆட்சிக்கு வந்து 14 நாட்களுக்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரைக் கொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருந்தது. அங்கு வந்திருந்த குழுவினர் கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றும் நோக்குடன் வரவில்லை எனவும் அவரை கொலை செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்ததை தாம் நன்கு அறிவதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு வருகை தந்தவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளது. எனவேதான் தற்போதைய அரசாங்கம் ஒரு அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே தாம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.