• Dec 04 2024

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு விசேட கொடுப்பனவு - அரசாங்கம் அறிவிப்பு!

Tamil nila / Dec 3rd 2024, 7:42 pm
image

விசேட தேவையுடைய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

 அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது. 

 பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 இதேவேளை பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு விசேட கொடுப்பனவு - அரசாங்கம் அறிவிப்பு விசேட தேவையுடைய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது.  பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இதேவேளை பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement