• Jan 11 2025

இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி தொடர்பில் அரசின் அறிவிப்பு

Chithra / Jan 1st 2025, 8:17 am
image


இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி நீக்கப்படமாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் 77,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது துறைமுகத்தில் உள்ள சுமார் 11,000 மெற்றிக் டன் அரிசி, இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும். 

கணிசமான அளவு அரிசி தொகை தற்போது நாட்டுக்குள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தனியார் துறையின் விநியோக வலையமைப்பிலுள்ள சில சிக்கல் காரணமாகத் தாமதம் ஏற்படலாம். 

ஜனவரி மாத நடுப்பகுதியளவில் உள்நாட்டு விவசாயிகளின் அரிசியும் சந்தைக்குக் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக விதிக்கப்படும் வரியை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. 

அத்துடன், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையைத் திருத்துவது தொடர்பிலும் அமைச்சரவை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி தொடர்பில் அரசின் அறிவிப்பு இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான வரி நீக்கப்படமாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் 77,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது துறைமுகத்தில் உள்ள சுமார் 11,000 மெற்றிக் டன் அரிசி, இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும். கணிசமான அளவு அரிசி தொகை தற்போது நாட்டுக்குள் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும், தனியார் துறையின் விநியோக வலையமைப்பிலுள்ள சில சிக்கல் காரணமாகத் தாமதம் ஏற்படலாம். ஜனவரி மாத நடுப்பகுதியளவில் உள்நாட்டு விவசாயிகளின் அரிசியும் சந்தைக்குக் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக விதிக்கப்படும் வரியை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. அத்துடன், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையைத் திருத்துவது தொடர்பிலும் அமைச்சரவை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement