• Nov 13 2025

குடும்பச் சொத்தாக மாறிய அரச காணி? முன்னாள் அமைச்சர்களின் இரகசியம் அம்பலம்

Chithra / Nov 12th 2025, 12:10 pm
image

 

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அரசாங்க நிலங்களை தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளதாகப் பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும், சில அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு  நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்தச் சட்டம் இலக்கம் 1  இன் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகள் முறையாக அளவிடப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் வெளிப்படுத்தினார். 

1972 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் எவ்வளவு ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குடும்பச் சொத்தாக மாறிய அரச காணி முன்னாள் அமைச்சர்களின் இரகசியம் அம்பலம்  காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அரசாங்க நிலங்களை தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளதாகப் பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இவர் இதனைத் தெரிவித்தார். மேலும், சில அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு  நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்தச் சட்டம் இலக்கம் 1  இன் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகள் முறையாக அளவிடப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் வெளிப்படுத்தினார். 1972 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் எவ்வளவு ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement