• Nov 23 2024

மலையகப் பாடசாலைகளுக்கு இந்திய அரசு நிதி உதவி..!

Chithra / Jul 30th 2024, 12:49 pm
image

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் மலையக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்தோடு, முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் மலையக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2019.06.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்களால் குறித்த கருத்திட்டத்தின் நன்கொடையை 600 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகப் பாடசாலைகளுக்கு இந்திய அரசு நிதி உதவி. இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் மலையக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அத்தோடு, முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் மலையக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2019.06.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்களால் குறித்த கருத்திட்டத்தின் நன்கொடையை 600 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.இதனடிப்படையில், ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement