• Nov 22 2024

கச்சதீவுக்கு திடீரென படையெடுத்த அரச அதிகாரிகள்....! கடற்படையினர் எடுத்த நடவடிக்கை...!samugammedia

Sharmi / Jan 16th 2024, 1:27 pm
image

எதிர்வரும் பங்குனி மாதம் 09,10ஆம்  திகதிகளில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள விஜயம் இன்று இடம்பெற்றது.

குறித்த களவிஜயமானது  எழுவைதீவில் இருந்து கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயம்  வரை கடல் வழி மார்க்கமாக இடம்பெற்றது.

இதில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீமோகனன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் அ.ஜெயகாந்தன், நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினரும், மற்றும் தீவக கடற்படையின் பிரதான கண்காணி ப்பாளர் வைல்ட் பெணாண்டோ மற்றும்   கடற்படையினர்கள் இவ் விஜயத்தில் கலந்துகொண்டனர்.

இவ் விஜயத்தின் போது வருடாந்த பெருந் திருவிழாவில் இந்திய ,இலங்கை மக்களின் வருகையும், அவர்களுக்கான தங்குமிட வசதிகள், தேவாலயத்தின் துப்பரவுப் பணிகள், மருத்து வசதிகள், குடிநீர் பெற்றுக்கொடுத்தல், சிற்றுண்டி வசதிகள்,படகுசேவை போக்குவரத்து ஒழுங்குகள் இதர பாதுகாப்பு வசதி வாய்ப்புக்கள் பற்றி இதன்போது  யாழ்ப்பாண மாவட்ட செயலக, நெடுந்தீவு பிரதேச  தலைமை நிர்வாக அதிகரிகளினால் எடுத்துக்கூறப்பட்ட விடயங்களில் இலங்கை கடற்படையினர் அதற்கான முழுமையான பங்களிப்பினை வழங்குவதாக தீவக கடற்படையின் பிரதான கண்காணிப்பாளர் வைல்ட் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.


கச்சதீவுக்கு திடீரென படையெடுத்த அரச அதிகாரிகள். கடற்படையினர் எடுத்த நடவடிக்கை.samugammedia எதிர்வரும் பங்குனி மாதம் 09,10ஆம்  திகதிகளில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள விஜயம் இன்று இடம்பெற்றது.குறித்த களவிஜயமானது  எழுவைதீவில் இருந்து கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயம்  வரை கடல் வழி மார்க்கமாக இடம்பெற்றது.இதில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீமோகனன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் அ.ஜெயகாந்தன், நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினரும், மற்றும் தீவக கடற்படையின் பிரதான கண்காணி ப்பாளர் வைல்ட் பெணாண்டோ மற்றும்   கடற்படையினர்கள் இவ் விஜயத்தில் கலந்துகொண்டனர்.இவ் விஜயத்தின் போது வருடாந்த பெருந் திருவிழாவில் இந்திய ,இலங்கை மக்களின் வருகையும், அவர்களுக்கான தங்குமிட வசதிகள், தேவாலயத்தின் துப்பரவுப் பணிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் பெற்றுக்கொடுத்தல், சிற்றுண்டி வசதிகள்,படகுசேவை போக்குவரத்து ஒழுங்குகள் இதர பாதுகாப்பு வசதி வாய்ப்புக்கள் பற்றி இதன்போது  யாழ்ப்பாண மாவட்ட செயலக, நெடுந்தீவு பிரதேச  தலைமை நிர்வாக அதிகரிகளினால் எடுத்துக்கூறப்பட்ட விடயங்களில் இலங்கை கடற்படையினர் அதற்கான முழுமையான பங்களிப்பினை வழங்குவதாக தீவக கடற்படையின் பிரதான கண்காணிப்பாளர் வைல்ட் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement