• Nov 26 2024

காலநிலை மாற்றம் தொடர்பாக அரசியற் கட்சிகளின் திட்டங்களைத் தேர்தல் அறிக்கைகளில் உள்ளடக்க வேண்டும்- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கோரிக்கை..!

Sharmi / Oct 8th 2024, 6:27 pm
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளை தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

உலகம் இன்று எதிர்நோக்கும் தலையாய பிரச்சினைகளில் காலநிலை மாற்றமும் இதர சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் முதலிடத்தில் உள்ளன. 

நாடுகளில் நிலவும் வளப்பற்றாக் குறைவு, வறுமை, பஞ்சம், பட்டினி போன்றனவற்றின் அடிப்படைக் காரணங்களாகவும் இவை உள்ளன. 

காலநிலை மாற்றங்களுக்கும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கும் நாடு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாகத் திட்டங்களை வகுக்கவும், அவற்றை நிறைவேற்றவும் வேண்டிய கடப்பாடு அரசாங்கங்களுக்கே உரியதாகும். 

இவை தொடர்பாக ஏற்கனவே உலக நாடுகள் பலவும் விழிப்புணர்வு பெற்று வினைத்திறனுடன் செயலாற்றத் தொடங்கியுள்ளன. 

இலங்கையும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இலங்கையின் நாளைய  அரசாங்கத்தை இன்று தேர்தலில் ஈடுபடும் கட்சிகளே அமைக்கப் போகின்றன. 

அந்த வகையில், தேர்தல்களை நடாத்துகின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் கட்சிகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டிய கடப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். 

அத்தோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் பிளாஸ்ரிக் கொடிகளையும், ஒருநாள் பாவித்து விட்டு வீசும் பிளாஸ்ரிக் குவளைகளையும் அறவே தவிர்க்குமாறு இறுக்கமாக அறிவுறுத்த வேண்டுமென்றும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பாக அரசியற் கட்சிகளின் திட்டங்களைத் தேர்தல் அறிக்கைகளில் உள்ளடக்க வேண்டும்- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கோரிக்கை. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளை தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.அந்தக் கடிதத்தில்,உலகம் இன்று எதிர்நோக்கும் தலையாய பிரச்சினைகளில் காலநிலை மாற்றமும் இதர சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் முதலிடத்தில் உள்ளன. நாடுகளில் நிலவும் வளப்பற்றாக் குறைவு, வறுமை, பஞ்சம், பட்டினி போன்றனவற்றின் அடிப்படைக் காரணங்களாகவும் இவை உள்ளன. காலநிலை மாற்றங்களுக்கும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கும் நாடு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாகத் திட்டங்களை வகுக்கவும், அவற்றை நிறைவேற்றவும் வேண்டிய கடப்பாடு அரசாங்கங்களுக்கே உரியதாகும். இவை தொடர்பாக ஏற்கனவே உலக நாடுகள் பலவும் விழிப்புணர்வு பெற்று வினைத்திறனுடன் செயலாற்றத் தொடங்கியுள்ளன. இலங்கையும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இலங்கையின் நாளைய  அரசாங்கத்தை இன்று தேர்தலில் ஈடுபடும் கட்சிகளே அமைக்கப் போகின்றன. அந்த வகையில், தேர்தல்களை நடாத்துகின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் கட்சிகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டிய கடப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் பிளாஸ்ரிக் கொடிகளையும், ஒருநாள் பாவித்து விட்டு வீசும் பிளாஸ்ரிக் குவளைகளையும் அறவே தவிர்க்குமாறு இறுக்கமாக அறிவுறுத்த வேண்டுமென்றும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement