• Jun 14 2024

அரச ஊழியர்கள் வரி செலுத்துவதற்கு தயார்-ரணிலிடம் கேள்விகளை முன்வைத்துள்ள ஹர்ஷ!

Sharmi / Feb 10th 2023, 9:37 am
image

Advertisement

இலங்கையில் ஒரு இலட்சம் பெறுகின்றவர்கள் முதல் 30 இலட்சம் ரூபா வரை சம்பளம் பெறுகின்ற அனைவருக்கும் ஒரேயளவில் வரி அறவிடப்படுவது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நிலையான அபிவிருத்திக்கு மக்கள் ஆணை அவசியமாகும். எனவே தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார மீட்சி என்பது மிகவும் மந்தமானதாகவே காணப்படும். உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் வரி செலுத்துவதற்கு தயாராகவே உள்ளனர். அதற்காக 36 வீத வரியை அறவிடுவது நியாயமற்றது. உதாரணமாக மாதாந்தம் சுமார் 30 இலட்சம் வருமானம் பெரும் ஒருவருக்கு 36 வீத வரி என்பது நியாயமானதாகும்.

ஆனால் ஒரு இலட்சம் பெறுபவர் முதல் 30 இலட்சம் பெறுபவர் வரை அனைவருக்கும் ஒரேயளவில் வரி அறவிடப்படுவது நியாயமற்றது.கடன் மறுசீரமைப்புக்களின் போது கடன் வழங்குனர்களின் ஒரு தரப்பு இணக்கம் தெரிவிக்காவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் வரி செலுத்துவதற்கு தயார்-ரணிலிடம் கேள்விகளை முன்வைத்துள்ள ஹர்ஷ இலங்கையில் ஒரு இலட்சம் பெறுகின்றவர்கள் முதல் 30 இலட்சம் ரூபா வரை சம்பளம் பெறுகின்ற அனைவருக்கும் ஒரேயளவில் வரி அறவிடப்படுவது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.நிலையான அபிவிருத்திக்கு மக்கள் ஆணை அவசியமாகும். எனவே தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார மீட்சி என்பது மிகவும் மந்தமானதாகவே காணப்படும். உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அரச ஊழியர்கள் வரி செலுத்துவதற்கு தயாராகவே உள்ளனர். அதற்காக 36 வீத வரியை அறவிடுவது நியாயமற்றது. உதாரணமாக மாதாந்தம் சுமார் 30 இலட்சம் வருமானம் பெரும் ஒருவருக்கு 36 வீத வரி என்பது நியாயமானதாகும். ஆனால் ஒரு இலட்சம் பெறுபவர் முதல் 30 இலட்சம் பெறுபவர் வரை அனைவருக்கும் ஒரேயளவில் வரி அறவிடப்படுவது நியாயமற்றது.கடன் மறுசீரமைப்புக்களின் போது கடன் வழங்குனர்களின் ஒரு தரப்பு இணக்கம் தெரிவிக்காவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement