• May 17 2024

36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Sharmi / Feb 10th 2023, 9:30 am
image

Advertisement

இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36,000 நிராகரிக்கப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் இருப்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக 676,873 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டம் தபால்மூல வாக்களிப்பில் அதிகளவானோர் தகுதி பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கை 75,579. மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 55,750 பேரும், கண்டி மாவட்டத்தில் 54,012 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால்மூல வாக்காளர்கள் குறைவாக உள்ளனர், அந்த எண்ணிக்கை 3,187 ஆகும்.

கடந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 47,430 ஆகும். அந்தத் தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க 753,037 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 705,085 ஆகும்.

36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36,000 நிராகரிக்கப்பட்டுள்ளன.பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் இருப்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக 676,873 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.குருநாகல் மாவட்டம் தபால்மூல வாக்களிப்பில் அதிகளவானோர் தகுதி பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கை 75,579. மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 55,750 பேரும், கண்டி மாவட்டத்தில் 54,012 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால்மூல வாக்காளர்கள் குறைவாக உள்ளனர், அந்த எண்ணிக்கை 3,187 ஆகும்.கடந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 47,430 ஆகும். அந்தத் தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க 753,037 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 705,085 ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement