• Oct 17 2024

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி..!

Chithra / May 17th 2024, 8:25 am
image

Advertisement

 

முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட்   முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் அவர் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடத்திலான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை சர்வதேச ஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்து கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இலங்கை புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி.  முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட்   முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் அவர் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடத்திலான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை சர்வதேச ஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்து கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த நிலையில் இலங்கை புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement