• Jan 13 2025

மியன்மார் அகதிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் - ரிஷாத்

Chithra / Jan 10th 2025, 7:28 am
image

 

ஒரு நாட்டுக்கு வரும் அகதிகளை அந்த அரசாங்கம் எவ்வாறு கையாள வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன. அதனை மீறி யாருக்கும் செயற்பட முடியாது. அதனால் இலங்கைக்கு வந்திருக்கும் மியன்மார் அகதிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மியன்மார் நாட்டில் உள்ள அரசாங்கமோ அரசாங்கத்துக்கு சார்ப்பான குழுங்களினாலோ அல்லது வேறு குழுக்களினால் தொடர்ந்தும் அங்குள்ள முஸ்லிம்களை துன்புறுத்துகின்ற, துறத்துகின்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுவகின்றன. 

அதனால் அந்த சித்திரவதைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான அந்த மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இவ்வாறு தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக எங்கோ சென்ற மக்கள்தான் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

ஆனால் அவ்வாறு வந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடகங்கள் ஊடாக தெரியவருகிறது. 

அவ்வாறு அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். ஒரு நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக வரும் மக்களை இந்த அரசாங்கம் அதேநாட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் அது அந்த மக்களை பாரியதொரு ஆபத்தான வியத்தில் தள்ளிவிடுவதாக அமையும். 

அதனால் அரசாங்கம் இந்த மியன்மார் அகதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் கலந்துரையாடி, அவர்கள் விரும்புகின்ற அகதிகளை ஏற்றுக்கொள்கின்ற நாடுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எமது நாட்டில் யுத்தம் இடம்பெற்றபோதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வாழமுடியாமல் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றார்கள்.

அவர்கள் இன்று அந்த நாடுகளில் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். மியன்மாரில் வந்திருக்கும் இந்த அகதிகளை இந்த நாட்டில் குடியேற்றுங்கள் என நாங்கள் தெரிவிக்கவில்லை. மாறாக சர்வதேச சட்டத்தின் பிரகாரம், நடைமுறைகளுக்கு அமைய, கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு அகதிகள் வந்தபோது, அவர்களை ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் கலந்துரையாடி மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அனுப்பி இருக்கிறது. அதேபோன்று இந்த அகதிகள் விடயத்திலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று நாங்களும் அந்த மக்களை பார்ப்பதற்கு, உதவி செய்ய விரும்புகிறோம். அதற்கும் எங்களுக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மியன்மார் அகதிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் - ரிஷாத்  ஒரு நாட்டுக்கு வரும் அகதிகளை அந்த அரசாங்கம் எவ்வாறு கையாள வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன. அதனை மீறி யாருக்கும் செயற்பட முடியாது. அதனால் இலங்கைக்கு வந்திருக்கும் மியன்மார் அகதிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,மியன்மார் நாட்டில் உள்ள அரசாங்கமோ அரசாங்கத்துக்கு சார்ப்பான குழுங்களினாலோ அல்லது வேறு குழுக்களினால் தொடர்ந்தும் அங்குள்ள முஸ்லிம்களை துன்புறுத்துகின்ற, துறத்துகின்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுவகின்றன. அதனால் அந்த சித்திரவதைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான அந்த மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இவ்வாறு தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக எங்கோ சென்ற மக்கள்தான் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.ஆனால் அவ்வாறு வந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடகங்கள் ஊடாக தெரியவருகிறது. அவ்வாறு அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். ஒரு நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக வரும் மக்களை இந்த அரசாங்கம் அதேநாட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் அது அந்த மக்களை பாரியதொரு ஆபத்தான வியத்தில் தள்ளிவிடுவதாக அமையும். அதனால் அரசாங்கம் இந்த மியன்மார் அகதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் கலந்துரையாடி, அவர்கள் விரும்புகின்ற அகதிகளை ஏற்றுக்கொள்கின்ற நாடுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எமது நாட்டில் யுத்தம் இடம்பெற்றபோதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வாழமுடியாமல் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றார்கள்.அவர்கள் இன்று அந்த நாடுகளில் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். மியன்மாரில் வந்திருக்கும் இந்த அகதிகளை இந்த நாட்டில் குடியேற்றுங்கள் என நாங்கள் தெரிவிக்கவில்லை. மாறாக சர்வதேச சட்டத்தின் பிரகாரம், நடைமுறைகளுக்கு அமைய, கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு அகதிகள் வந்தபோது, அவர்களை ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் கலந்துரையாடி மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அனுப்பி இருக்கிறது. அதேபோன்று இந்த அகதிகள் விடயத்திலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று நாங்களும் அந்த மக்களை பார்ப்பதற்கு, உதவி செய்ய விரும்புகிறோம். அதற்கும் எங்களுக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement