• Jul 16 2025

அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

Chithra / Jul 16th 2025, 8:42 am
image


தங்களது விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 15(7) படி, பரிந்துரைகளை செயல்படுத்திய விவரங்களை, நியமிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அரச நிறுவனங்கள், ஆணைக்குழுவுக்கு அறிவிப்பது கட்டாயமாகும்.  

சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், பரிந்துரைகளை செயல்படுத்த மறுத்து 'மேல்முறையீடு உள்ளது' எனக் கூறுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது. 

சட்டத்தின் பிரகாரம், தங்களது பரிந்துரைகள் மீது மேல்முறையீட்டுக்கான வாய்ப்பு ஏதும் இல்லை எனவும், அதனைச் சுட்டிகாட்டி பரிந்துரைகளை செயல்படுத்துவதை தவிர்ப்பது சட்டவிரோதமானது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எனவே, அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை உணர்ந்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 

இதனை தவிர்க்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை தங்களது விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 15(7) படி, பரிந்துரைகளை செயல்படுத்திய விவரங்களை, நியமிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அரச நிறுவனங்கள், ஆணைக்குழுவுக்கு அறிவிப்பது கட்டாயமாகும்.  சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், பரிந்துரைகளை செயல்படுத்த மறுத்து 'மேல்முறையீடு உள்ளது' எனக் கூறுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது. சட்டத்தின் பிரகாரம், தங்களது பரிந்துரைகள் மீது மேல்முறையீட்டுக்கான வாய்ப்பு ஏதும் இல்லை எனவும், அதனைச் சுட்டிகாட்டி பரிந்துரைகளை செயல்படுத்துவதை தவிர்ப்பது சட்டவிரோதமானது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை உணர்ந்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதனை தவிர்க்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement