• Nov 28 2024

இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்கள் பாராமுகம்...! அன்னராசா குற்றச்சாட்டு...!

Sharmi / Mar 7th 2024, 1:05 pm
image

வடமாகாண கடற்றொழிலாளர்களால் இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலும் இலங்கை இந்திய அரசாங்கங்கள் பாராமுகமாக இருப்பது எமக்கு கவலை அளிப்பதாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா  தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம்(06)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில் ,

 மீனவர்கள் கரையில் போடுகின்றார்கள் அதேவேளை கடலில் போராடுகின்றார்கள். ஆனால் அரசாங்கங்களும் பொறுப்பான அமைச்சர்களும் இது தொடர்பில் அமைதி காக்கின்றார்கள்.

அதேவேளை கடற்றொழில் அமைச்சரும் பிரச்சினையை தீர்ப்பேன் தீர்ப்பேன் என்று கூறிவருகின்றார்.

ஆனால் தினமும் எங்களுடைய கடல்வளமும் வாழ்வாதாரமும் திட்டமிட்டு இலங்கை இந்திய அரசுகளால் அழிக்கப்படுகின்றது.

அதற்கு இலங்கை இந்தியாவிலே தடைசெய்யப்பட்ட இழுவை மடி  தொழில்களினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குரிய மகஜரையும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குரிய மகஜரையும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தோடு இணைந்து குறித்த மகஜரை சம்பந்தப்பட்டோருக்கு கையளித்துள்ளோம். எனினும் எனினும் எமது மகஜர் மற்றும் நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பிலோ அரசாங்கங்கள் எமக்கு தீர்வை வழங்குவதாக தெரியவில்லை.

நாங்கள் ஒருமாத கால அவகாசத்திலே இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இலங்கை கடற்படையும் இந்திய கடலோர காவற்படையும் இணைந்து  இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய விடாமல் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்து இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதனை இலங்கை இந்திய அரசாங்கங்கள்  செய்யத் தவறினால் நாங்கள் தொடர் போராட்டமாக வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து வடக்கு கடற் பிரதேசத்திலே போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆலோசித்துள்ளோம்.

அந்த ஆலோசனையின் அடிப்படையில் இலங்கை இந்திய அரசாங்கங்கள் மீனவர் பிரச்சினையை தீர்வு நோக்கி நகர்த்தி முடிவு எட்டப்படவேண்டும் என்றும் எமது இந்த போராட்டத்திற்கும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கும் நாட்டின் கற்பிட்டி, புத்தளம், கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களும் எமக்கு பூரண ஆதரவு தந்துள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களும் எம்முடன் இணைந்து தேசிய ரீதியிலே இந்த போராட்டத்தை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.

எனவே அந்த போராட்டத்திற்கு மீனவ சமூகத்தை இட்டுச் செல்லாது இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய  பிரதமர் இணைந்து உரிய அதிகாரிகளும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் என்பதுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அதேவேளை எதிர்வரும்  சித்திரை மாதம் 6 ஆம் திகதிக்கு இடையிலே  இலங்கை இந்திய அரசுகள் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டவேண்டும். அதேவேளை கூட்டு ரோந்து ஆரம்பிக்கப்பட்டு இந்தியமடி இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய விடாது தடுத்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவேண்டும்.

அவ்வாறு தவறும் பட்சத்திலே வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து இந்திய இலங்கை கடல் எல்லையிலே எங்களது கடல் பகுதியை மீட்பதற்காக தொடர் போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் தெரிவித்தார்.









இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்கள் பாராமுகம். அன்னராசா குற்றச்சாட்டு. வடமாகாண கடற்றொழிலாளர்களால் இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலும் இலங்கை இந்திய அரசாங்கங்கள் பாராமுகமாக இருப்பது எமக்கு கவலை அளிப்பதாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா  தெரிவித்துள்ளார்.யாழில் நேற்றையதினம்(06)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில் , மீனவர்கள் கரையில் போடுகின்றார்கள் அதேவேளை கடலில் போராடுகின்றார்கள். ஆனால் அரசாங்கங்களும் பொறுப்பான அமைச்சர்களும் இது தொடர்பில் அமைதி காக்கின்றார்கள்.அதேவேளை கடற்றொழில் அமைச்சரும் பிரச்சினையை தீர்ப்பேன் தீர்ப்பேன் என்று கூறிவருகின்றார்.ஆனால் தினமும் எங்களுடைய கடல்வளமும் வாழ்வாதாரமும் திட்டமிட்டு இலங்கை இந்திய அரசுகளால் அழிக்கப்படுகின்றது.அதற்கு இலங்கை இந்தியாவிலே தடைசெய்யப்பட்ட இழுவை மடி  தொழில்களினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குரிய மகஜரையும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குரிய மகஜரையும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தோடு இணைந்து குறித்த மகஜரை சம்பந்தப்பட்டோருக்கு கையளித்துள்ளோம். எனினும் எனினும் எமது மகஜர் மற்றும் நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பிலோ அரசாங்கங்கள் எமக்கு தீர்வை வழங்குவதாக தெரியவில்லை.நாங்கள் ஒருமாத கால அவகாசத்திலே இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இலங்கை கடற்படையும் இந்திய கடலோர காவற்படையும் இணைந்து  இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய விடாமல் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்து இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதனை இலங்கை இந்திய அரசாங்கங்கள்  செய்யத் தவறினால் நாங்கள் தொடர் போராட்டமாக வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து வடக்கு கடற் பிரதேசத்திலே போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆலோசித்துள்ளோம்.அந்த ஆலோசனையின் அடிப்படையில் இலங்கை இந்திய அரசாங்கங்கள் மீனவர் பிரச்சினையை தீர்வு நோக்கி நகர்த்தி முடிவு எட்டப்படவேண்டும் என்றும் எமது இந்த போராட்டத்திற்கும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கும் நாட்டின் கற்பிட்டி, புத்தளம், கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களும் எமக்கு பூரண ஆதரவு தந்துள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களும் எம்முடன் இணைந்து தேசிய ரீதியிலே இந்த போராட்டத்தை ஆரம்பிக்கவிருக்கின்றோம். எனவே அந்த போராட்டத்திற்கு மீனவ சமூகத்தை இட்டுச் செல்லாது இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய  பிரதமர் இணைந்து உரிய அதிகாரிகளும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் என்பதுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.அதேவேளை எதிர்வரும்  சித்திரை மாதம் 6 ஆம் திகதிக்கு இடையிலே  இலங்கை இந்திய அரசுகள் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டவேண்டும். அதேவேளை கூட்டு ரோந்து ஆரம்பிக்கப்பட்டு இந்தியமடி இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய விடாது தடுத்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவேண்டும்.அவ்வாறு தவறும் பட்சத்திலே வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து இந்திய இலங்கை கடல் எல்லையிலே எங்களது கடல் பகுதியை மீட்பதற்காக தொடர் போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement