கடந்த 2022 ஆம் ஆண்டுக்காக 2023இல் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கலைப்பிரிவில் 100 வீதம் சித்தி பெற்ற குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான கௌரவிப்பு சான்றிதழ் வடமேல் மாகாண ஆளுநரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் இன்று (28) வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2022 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டில் இடம்பெற்று கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியாகியிருந்தது.
அதற்கமைய கலைப்பிரிவில் குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தி பெற்றிருந்தனர்.
இவ்வாறு சித்தியடைந்தமைக்காக குருநாகல் மலியதேவ பாலிகா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வடமேல் மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதீதியாக பங்கேற்ற வடமேல் மாகாண ஆளுநரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கலந்துகொண்டார்.
இதன்போது, குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான கௌரவ சான்றிதழ் பாடசாலை அதிபர் முஹம்மது நௌபாத் அவர்களிடம் மாகாண ஆளுநர் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சாதாரன தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை போன்றவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற கற்பிட்டிக் கோட்டப் பாடசாலைகளான அல் அக்ஸா தேசிய பாடசாலை, ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம், பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம், திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயம் என்பனவும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சையில் நூறு வீதம் சித்திபெற்ற பாடசாலையை கௌரவித்த வடமேல் மாகாண ஆளுநர்.samugammedia கடந்த 2022 ஆம் ஆண்டுக்காக 2023இல் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கலைப்பிரிவில் 100 வீதம் சித்தி பெற்ற குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான கௌரவிப்பு சான்றிதழ் வடமேல் மாகாண ஆளுநரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் இன்று (28) வழங்கி வைக்கப்பட்டது.கடந்த 2022 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டில் இடம்பெற்று கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியாகியிருந்தது. அதற்கமைய கலைப்பிரிவில் குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தி பெற்றிருந்தனர். இவ்வாறு சித்தியடைந்தமைக்காக குருநாகல் மலியதேவ பாலிகா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வடமேல் மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதீதியாக பங்கேற்ற வடமேல் மாகாண ஆளுநரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கலந்துகொண்டார்.இதன்போது, குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான கௌரவ சான்றிதழ் பாடசாலை அதிபர் முஹம்மது நௌபாத் அவர்களிடம் மாகாண ஆளுநர் வழங்கி கௌரவித்தார்.மேலும் இந்நிகழ்வில் சாதாரன தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை போன்றவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற கற்பிட்டிக் கோட்டப் பாடசாலைகளான அல் அக்ஸா தேசிய பாடசாலை, ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம், பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம், திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயம் என்பனவும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.