கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக நிலவும் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடன் செலுத்துவதில் எதிர்நோக்கும் சிக்கல் நிலை குறித்து கவனம் செலுத்தி மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்ட நிலைமை காரணமாக வங்கிகள் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விடுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வங்கி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடன்களை செலுத்துவதற்கு சில கால அவகாசம் வழங்குவது பொருத்தமான நடவடிக்கை என அமைச்சரவை கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வங்கிகளில் கடன் பெற்ற நிலையில் செலுத்த முடியாதவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு. கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த மூன்று வருடங்களாக நிலவும் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடன் செலுத்துவதில் எதிர்நோக்கும் சிக்கல் நிலை குறித்து கவனம் செலுத்தி மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.தற்போதைய சட்ட நிலைமை காரணமாக வங்கிகள் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விடுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வங்கி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடன்களை செலுத்துவதற்கு சில கால அவகாசம் வழங்குவது பொருத்தமான நடவடிக்கை என அமைச்சரவை கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.