அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகையால் புத்தாண்டுக்கு முன்னர் தமக்கு சாதகமான முறையில் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தினர் தேர்தலை காலம் தாழ்த்திய போது எமது முயற்சியின் பலனாகவே, நீதிமன்றம் விரைந்து தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நியாயமான முறையில் நடாத்துவதற்காக, வரவு-செலவு திட்ட விவாதத்தின் பின்னர் தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கு அழைப்பு விடுக்குமாறும், தேர்தலை நடத்துமாறும் எதிர்க்கட்சிக கோரிக்கை விடுத்திருந்தன.
எனினும் அரசாங்கம் தமது குறைகளை மூடி மறைப்பதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இருக்கும் போது தேர்தலை நடத்த முடிவு செய்திருந்தனர். எனினும் எவ்வித காரணங்களுக்கும் இடமளிக்காது தேர்தலை நடத்த தீர்மானித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை சுமார் 1000 மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் எமது கட்சிக்கு கிடைத்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் 25 சதவீத இளைஞர்களை இணைத்துக் கொண்டு போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
கற்றவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய கட்சியில் உள்ள உறுப்பினர்களும் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட தயாராக உள்ளனர். அவர்களையும் ஏனையோரையும் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு அழைப்பு விடுக்கிறோம். என்றார்.
பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இதுவரை அரசாங்கம் நிறைவேற்றவில்லை - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகையால் புத்தாண்டுக்கு முன்னர் தமக்கு சாதகமான முறையில் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,கடந்த அரசாங்கத்தினர் தேர்தலை காலம் தாழ்த்திய போது எமது முயற்சியின் பலனாகவே, நீதிமன்றம் விரைந்து தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நியாயமான முறையில் நடாத்துவதற்காக, வரவு-செலவு திட்ட விவாதத்தின் பின்னர் தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கு அழைப்பு விடுக்குமாறும், தேர்தலை நடத்துமாறும் எதிர்க்கட்சிக கோரிக்கை விடுத்திருந்தன.எனினும் அரசாங்கம் தமது குறைகளை மூடி மறைப்பதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இருக்கும் போது தேர்தலை நடத்த முடிவு செய்திருந்தனர். எனினும் எவ்வித காரணங்களுக்கும் இடமளிக்காது தேர்தலை நடத்த தீர்மானித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இதுவரை சுமார் 1000 மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் எமது கட்சிக்கு கிடைத்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் 25 சதவீத இளைஞர்களை இணைத்துக் கொண்டு போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.கற்றவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய கட்சியில் உள்ள உறுப்பினர்களும் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட தயாராக உள்ளனர். அவர்களையும் ஏனையோரையும் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு அழைப்பு விடுக்கிறோம். என்றார்.