• Mar 06 2025

எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு..!

Sharmi / Mar 5th 2025, 9:17 am
image

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு அங்கு   வாக்குமூலம் வழங்கினர்.

இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

அதன்படி, இந்தக் குழுவை நேற்றையதினம் மாலை (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு அங்கு   வாக்குமூலம் வழங்கினர்.இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.அதன்படி, இந்தக் குழுவை நேற்றையதினம் மாலை (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement