• Nov 28 2024

மதுபானத்தை ஆர்வப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது...! சபையில் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவிப்பு...!

Sharmi / May 9th 2024, 12:00 pm
image

மதுபானத்தை ஆர்வப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாதாரன மதுபான போத்தலுக்காக நாம் இன்று 100க்கு  75 வீதம் வரியை அறவிடுகின்றோம்.

அதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு மதுபான பயன்பாட்டை அதிகரிப்பதற்கான தேவைப்பாடு கிடையாது.

இருப்பினும் சட்டவிரோத மதுபான பாவனையை குறைப்பதற்கும் அரச வருமானம் இன்மையை குறைப்பதற்கும் சவால் காணப்படுகின்றது.

நாங்கள் பொதுவாக மதுபான விற்பனை மூலமாக 75 வீத வரியினை அறவிடுகின்றோம்.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாங்கள் 2023 ஆம் ஆண்டு வரியினை 60 வீதத்தினால் அதிகரித்திருந்தோம்.

அதேவேளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மதுபான போத்தல்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி நாங்கள் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம்.

அதேபோன்று சிறப்பு சந்தைகளில் வருடாந்த விற்பனை 75 மில்லியன்கள் என்றால் அவர்களுக்கு மதுபான உரிமைப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு உரிமை இருக்கின்றது.

ஆனால் தற்போது அது ஒரு முறைகேடாக மாறியுள்ளது.

அதேவேளை வருடாந்தம் 75 மில்லியன்கள் என்பதை நாம் 1000 மில்லியன்களாக மாற்றியமைத்துள்ளோம்.

அந்த சிறப்பு சந்தைக்கு தான் இந்த மதுபான உரிமைப் பத்திரம் கிடைக்கின்றது.

அதேவேளை  எந்தவொரு மதுபான உரிமைப் பத்திரம் வழங்கும்போதும் பிரதேச செயலகத்திற்கு அதிகாரம் இருக்கின்றது.

அதாவது இது தொடர்பில் கிராம அலுவலர்களுக்கு அனுப்பி  பிரதேசத்தின் எதிர்ப்புக்கள் தொடர்பில் விசேட அறிக்கையினை கோருவதற்கு அதிகாரம் காணப்படுகின்றது.

அவ்வாறு எதிர்ப்புக்கள் வருமாக இருந்தால் அவர்களுக்கு மதுபான உரிமைப் பத்திரங்களை நாம் வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.




மதுபானத்தை ஆர்வப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது. சபையில் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவிப்பு. மதுபானத்தை ஆர்வப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.இன்றையதினம்(09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சாதாரன மதுபான போத்தலுக்காக நாம் இன்று 100க்கு  75 வீதம் வரியை அறவிடுகின்றோம்.அதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு மதுபான பயன்பாட்டை அதிகரிப்பதற்கான தேவைப்பாடு கிடையாது.இருப்பினும் சட்டவிரோத மதுபான பாவனையை குறைப்பதற்கும் அரச வருமானம் இன்மையை குறைப்பதற்கும் சவால் காணப்படுகின்றது.நாங்கள் பொதுவாக மதுபான விற்பனை மூலமாக 75 வீத வரியினை அறவிடுகின்றோம்.கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாங்கள் 2023 ஆம் ஆண்டு வரியினை 60 வீதத்தினால் அதிகரித்திருந்தோம்.அதேவேளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மதுபான போத்தல்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி நாங்கள் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம்.அதேபோன்று சிறப்பு சந்தைகளில் வருடாந்த விற்பனை 75 மில்லியன்கள் என்றால் அவர்களுக்கு மதுபான உரிமைப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு உரிமை இருக்கின்றது.ஆனால் தற்போது அது ஒரு முறைகேடாக மாறியுள்ளது.அதேவேளை வருடாந்தம் 75 மில்லியன்கள் என்பதை நாம் 1000 மில்லியன்களாக மாற்றியமைத்துள்ளோம்.அந்த சிறப்பு சந்தைக்கு தான் இந்த மதுபான உரிமைப் பத்திரம் கிடைக்கின்றது.அதேவேளை  எந்தவொரு மதுபான உரிமைப் பத்திரம் வழங்கும்போதும் பிரதேச செயலகத்திற்கு அதிகாரம் இருக்கின்றது.அதாவது இது தொடர்பில் கிராம அலுவலர்களுக்கு அனுப்பி  பிரதேசத்தின் எதிர்ப்புக்கள் தொடர்பில் விசேட அறிக்கையினை கோருவதற்கு அதிகாரம் காணப்படுகின்றது.அவ்வாறு எதிர்ப்புக்கள் வருமாக இருந்தால் அவர்களுக்கு மதுபான உரிமைப் பத்திரங்களை நாம் வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement