• Jul 24 2025

யாழ் தேவி ரயிலில் 'சகோதரத்துவப் பயணம்' – கிளிநொச்சியில் பெரும் வரவேற்பு!

Thansita / Jul 23rd 2025, 5:53 pm
image

சகோதரத்துவத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக யாழ் தேவி புகையிரதத்தில்  கொழும்பிலிருந்து ஆரம்பித்த பயணத்தில் கிளிநொச்சியிலிருந்தும் பலர் இணைந்தனர்.

சகோதரத்துவத்தினை நினைவுகூரும் விதமாக  சோஷலிச இளைஞர் சங்கம் யாழ் தேவி ரயிலில் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை ஆரம்பித்த புகையிரதமானது 1.40மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. 

'கறுப்பு யூலை' என வர்ணிக்கப்படும் திகதியை, இனவாத நினைவாக அல்லாது சகோதரத்துவத்தினை நினைவுகூரும் நாளாக மாற்றும் முயற்சியை இலங்கையின் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.


 அதன் இன்னொரு கட்டமாக, சகோதரத்தினைப் பெருமைப்படுத்தும் நாளில், யாழ் தேவி ரயிலில் சகோதரத்துவ அன்பினை ஏந்தியவாறு, பல நிகழ்ச்சிகளுடன் வடக்கு நோக்கி பயணிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர்  எரங்க குணசேகர,பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்


யாழ் தேவி ரயிலில் 'சகோதரத்துவப் பயணம்' – கிளிநொச்சியில் பெரும் வரவேற்பு சகோதரத்துவத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக யாழ் தேவி புகையிரதத்தில்  கொழும்பிலிருந்து ஆரம்பித்த பயணத்தில் கிளிநொச்சியிலிருந்தும் பலர் இணைந்தனர்.சகோதரத்துவத்தினை நினைவுகூரும் விதமாக  சோஷலிச இளைஞர் சங்கம் யாழ் தேவி ரயிலில் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை ஆரம்பித்த புகையிரதமானது 1.40மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. 'கறுப்பு யூலை' என வர்ணிக்கப்படும் திகதியை, இனவாத நினைவாக அல்லாது சகோதரத்துவத்தினை நினைவுகூரும் நாளாக மாற்றும் முயற்சியை இலங்கையின் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் இன்னொரு கட்டமாக, சகோதரத்தினைப் பெருமைப்படுத்தும் நாளில், யாழ் தேவி ரயிலில் சகோதரத்துவ அன்பினை ஏந்தியவாறு, பல நிகழ்ச்சிகளுடன் வடக்கு நோக்கி பயணிக்கப்படுகின்றது.கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர்  எரங்க குணசேகர,பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement