• Jul 24 2025

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

shanuja / Jul 23rd 2025, 5:07 pm
image

வவுனியா, செட்டிகுளத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.



நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை  கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் மற்றும் துட்டுவாகை ஆகிய பகுதிகளில் இரு வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.


இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது வவுனியா, செட்டிகுளத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை  கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் மற்றும் துட்டுவாகை ஆகிய பகுதிகளில் இரு வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement