பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக சுமார் 25,829 பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 672 சந்தேக நபர்களும், குற்றச் செயல்களுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்ட 16 பேரும், தினசரி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 171 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 131 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 09 வழக்குகள் மற்றும் 3,439 பிற போக்குவரத்து குற்றங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக சுமார் 25,829 பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 672 சந்தேக நபர்களும், குற்றச் செயல்களுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்ட 16 பேரும், தினசரி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 171 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 131 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 09 வழக்குகள் மற்றும் 3,439 பிற போக்குவரத்து குற்றங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.