• Sep 07 2025

மாணவி கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டு இன்று 29 ஆண்டுகள்; செம்மணி வளைவில் நினைவேந்தல்

Chithra / Sep 7th 2025, 1:12 pm
image

 

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று  காலை யாழ்ப்பாணம் - நல்லூர் செம்மணி வளைவில் இடம்பெற்றது.

நினைவுநாளுக்கான பொதுச் சுடரை கிருஷாந்தியின் சிறிய தந்தை ஏற்றிவைத்தைதொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது 

1996 ஆம் ஆண்டு செம்மணி முகாமில் நிலை கொண்டிருந்த படையினரால் கைது செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் செப்ரெம்பர் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

அவரை தேடிச் சென்ற தாய், தம்பி, அயலவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இது தொடர்பான வழக்கில் 6 இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் இந்த வழக்கில் இராணுவ உயரதிகாரிகள் பலர் தப்பிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொது அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மாணவி கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டு இன்று 29 ஆண்டுகள்; செம்மணி வளைவில் நினைவேந்தல்  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று  காலை யாழ்ப்பாணம் - நல்லூர் செம்மணி வளைவில் இடம்பெற்றது.நினைவுநாளுக்கான பொதுச் சுடரை கிருஷாந்தியின் சிறிய தந்தை ஏற்றிவைத்தைதொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது 1996 ஆம் ஆண்டு செம்மணி முகாமில் நிலை கொண்டிருந்த படையினரால் கைது செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் செப்ரெம்பர் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.அவரை தேடிச் சென்ற தாய், தம்பி, அயலவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.இது தொடர்பான வழக்கில் 6 இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.எனினும் இந்த வழக்கில் இராணுவ உயரதிகாரிகள் பலர் தப்பிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது.படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொது அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement