• Sep 07 2025

இரத்த நிற முழு சந்திர கிரகணம் இன்று இரவு முதல் தென்படும்; இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு!

Chithra / Sep 7th 2025, 8:08 am
image

வானில் அரிய வகை முழு சந்திர கிரணம்  இன்று தென்படவுள்ளது என்று வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். 

முழு சந்திர கிரணம் இரத்த நிலவாகத் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்று (7)  வரும் நிகினி போயா நாளில் இரவு 8.58 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 2.25 மணி வரை சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் . 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருட்டாக இருக்கும்.

இன்று (7)  இரவு 11.01 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 12.22 மணி வரை முழு சந்திர கிரகணம் தெரியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திர கிரகணம் உலக மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதத்தினருக்கு முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும்.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும். 

இதேவேளை, 2028 ஆம் ஆண்டு வரை இலங்கையர்களுக்கு இதுபோன்ற முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு கிடைக்காது என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு அரிய நிகழ்வைப் பயன்படுத்தி பாடசாலை மட்டத்தில் இரவு வான் கண்காணிப்பு முகாம்களை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரத்த நிற முழு சந்திர கிரகணம் இன்று இரவு முதல் தென்படும்; இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு வானில் அரிய வகை முழு சந்திர கிரணம்  இன்று தென்படவுள்ளது என்று வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். முழு சந்திர கிரணம் இரத்த நிலவாகத் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று (7)  வரும் நிகினி போயா நாளில் இரவு 8.58 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 2.25 மணி வரை சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் . சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருட்டாக இருக்கும்.இன்று (7)  இரவு 11.01 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 12.22 மணி வரை முழு சந்திர கிரகணம் தெரியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சந்திர கிரகணம் உலக மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதத்தினருக்கு முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும்.குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும். இதேவேளை, 2028 ஆம் ஆண்டு வரை இலங்கையர்களுக்கு இதுபோன்ற முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு கிடைக்காது என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.இந்த சிறப்பு அரிய நிகழ்வைப் பயன்படுத்தி பாடசாலை மட்டத்தில் இரவு வான் கண்காணிப்பு முகாம்களை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement