எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் இயந்திரக் கோளாறு இருப்பதுதெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்து நேற்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
முற்றிலுமாக சேதமடைந்த பேருந்தின் பாகங்கள் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பேருந்தின் இயந்திரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் பேருந்து விபத்து ஏற்பட்ட பகுதியையும் ஆய்வு செய்தனர்.
பேருந்தின் பாகங்கள் அரச பகுப்பாய்வாளர் ஆய்வுக்காக நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளன.
15 உயிர்களைப் காவுகொண்ட பேருந்து விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
எவ்வாறாயினும் பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததாக அதன் சாரதி கூச்சலிட்டதாக பேருந்தின் நடத்துநரும், பயணி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை எல்ல வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பேருந்தை செலுத்தும் போது அதன் சாரதி போதைப்பொருள் அல்லது மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய, அவரது இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எல்ல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை எல்ல - வெல்லவாய வீதியில் விபத்தில் சிக்கிய பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதிவில் இருந்து இடைவிலகிய பேருந்து என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கு பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு நாட்டில் இன்னும் சட்டங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்காலை நகரசபையின் ஊழியர்கள் குழுவொன்று நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் தங்காலைக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தொன்று, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 15 ஆவது மைல்கல் பகுதியில் சொகுசு வாகனமொன்றுடன் மோதி பின்னர் வீதியின் அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ராவண எல்ல பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் பலியானதுடன், 18 பேர் காயமடைந்தனர்.
சுற்றுலாப் பேருந்தின் சாரதியான தங்காலை, ஹெனகடுவவைச் சேர்ந்த சிரத் திமந்த (25) என்ற இளைஞரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.
15 பேரை பலியெடுத்த பேருந்தில் ஏற்பட்ட கோளாறு; சாரதி மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் இயந்திரக் கோளாறு இருப்பதுதெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விபத்துக்குள்ளான பேருந்து நேற்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. முற்றிலுமாக சேதமடைந்த பேருந்தின் பாகங்கள் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பேருந்தின் இயந்திரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன்பின்னர் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் பேருந்து விபத்து ஏற்பட்ட பகுதியையும் ஆய்வு செய்தனர்.பேருந்தின் பாகங்கள் அரச பகுப்பாய்வாளர் ஆய்வுக்காக நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளன. 15 உயிர்களைப் காவுகொண்ட பேருந்து விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. எவ்வாறாயினும் பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததாக அதன் சாரதி கூச்சலிட்டதாக பேருந்தின் நடத்துநரும், பயணி ஒருவரும் தெரிவித்துள்ளனர். அதேவேளை எல்ல வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பேருந்தை செலுத்தும் போது அதன் சாரதி போதைப்பொருள் அல்லது மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய, அவரது இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எல்ல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை எல்ல - வெல்லவாய வீதியில் விபத்தில் சிக்கிய பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதிவில் இருந்து இடைவிலகிய பேருந்து என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு நாட்டில் இன்னும் சட்டங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.தங்காலை நகரசபையின் ஊழியர்கள் குழுவொன்று நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் தங்காலைக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தொன்று, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 15 ஆவது மைல்கல் பகுதியில் சொகுசு வாகனமொன்றுடன் மோதி பின்னர் வீதியின் அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ராவண எல்ல பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 15 பேர் பலியானதுடன், 18 பேர் காயமடைந்தனர்.சுற்றுலாப் பேருந்தின் சாரதியான தங்காலை, ஹெனகடுவவைச் சேர்ந்த சிரத் திமந்த (25) என்ற இளைஞரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.