1988, 89களில் தேசிய சொத்துக்கள் பல அழிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் லால் காந்தவிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
149ஆவது பொலிஸ் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றச்செயல்கள் மேலும் தொடர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் அவர் அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் லால் காந்தவிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1988, 1989களிலேயே நாட்டில் பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
பல தேயிலை தொழிற்சாலைகள், பேருந்துகள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், மின் பிறப்பாக்கிகள் மற்றும் நெற் களஞ்சியசாலைகள் உள்ளிட்ட பல பொது சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மின் கம்பங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அமைச்சர் லால் காந்த இவை தொடர்பிலான பிரதான சாட்சியாளராவார்.
எனவே அவரிடமிருந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவை தவிர மேலும் பல சம்பவங்கள் ஆதரங்களுடன் நிரூபிக்கக் கூடியவையாகவுள்ளன. எதிர்வரும் நாட்களில் அவை தொடர்பில் ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
கடந்த வாரம் யக்கல பிரதேசத்தில் உள்ள முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்துக்குள் பலவந்தமாக உள்நுழைந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
எனவே நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் நீங்கள் கூறிய சட்டவாட்சியின் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
அழிக்கப்பட்ட பல சொத்துக்கள்; லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள்; ஜனாதிபதியிடம் தயாசிறி கோரிக்கை 1988, 89களில் தேசிய சொத்துக்கள் பல அழிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் லால் காந்தவிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,149ஆவது பொலிஸ் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றச்செயல்கள் மேலும் தொடர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் கருத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அவர் அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் லால் காந்தவிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1988, 1989களிலேயே நாட்டில் பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.பல தேயிலை தொழிற்சாலைகள், பேருந்துகள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், மின் பிறப்பாக்கிகள் மற்றும் நெற் களஞ்சியசாலைகள் உள்ளிட்ட பல பொது சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மின் கம்பங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அமைச்சர் லால் காந்த இவை தொடர்பிலான பிரதான சாட்சியாளராவார்.எனவே அவரிடமிருந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவை தவிர மேலும் பல சம்பவங்கள் ஆதரங்களுடன் நிரூபிக்கக் கூடியவையாகவுள்ளன. எதிர்வரும் நாட்களில் அவை தொடர்பில் ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். கடந்த வாரம் யக்கல பிரதேசத்தில் உள்ள முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்துக்குள் பலவந்தமாக உள்நுழைந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. எனவே நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் நீங்கள் கூறிய சட்டவாட்சியின் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.