• Sep 07 2025

தேடப்பட்டு வந்த பியல் மனம்பேரி கைது - கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Chithra / Sep 7th 2025, 12:10 pm
image

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். 

மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் 

கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் 

பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைநிறுத்தியுள்ளது.

போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் 

கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அங்குணகொலபெலஸ்ஸ தலாவைச் சேர்ந்த மனம்பேரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், "இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கட்சி கடுமையான கொள்கையை கடைப்பிடிக்கிறது.

அத்துடன், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த விசாரணைகள் விரைவில் முடிவடையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேடப்பட்டு வந்த பியல் மனம்பேரி கைது - கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைநிறுத்தியுள்ளது.போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அங்குணகொலபெலஸ்ஸ தலாவைச் சேர்ந்த மனம்பேரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.மேலும், "இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கட்சி கடுமையான கொள்கையை கடைப்பிடிக்கிறது.அத்துடன், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த விசாரணைகள் விரைவில் முடிவடையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement