• Sep 07 2025

ரணிலின் இல்லத்தை சேதப்படுத்திய விவகாரம் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Chithra / Sep 7th 2025, 2:10 pm
image

காலி முகத்திடல் போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர்கள் மீது மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கோட்டை நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். 

காலி முகத்திடல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

குறித்த இருவரையும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரணிலின் இல்லத்தை சேதப்படுத்திய விவகாரம் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காலி முகத்திடல் போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர்கள் மீது மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கோட்டை நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். குறித்த இருவரையும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement