முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.அழககூன் தெரிவித்தார்.
முட்டையின் விலை சுமார் ஒரு வருடமாகக் குறைந்துள்ள நிலையில், முட்டைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை ஒப்பிடுகையில் குறையவில்லை.
அதன்படி கேக், முட்டை ரொட்டி, உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று டி.ஆர்.அழககூன் தெரிவித்தார்.
தற்போது முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பண்ணையில் இருந்து ஒரு முட்டை ரூ. 24-25 க்கு சந்தைக்கு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு தற்போது முட்டை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
முட்டை உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.அழககூன் தெரிவித்தார். முட்டையின் விலை சுமார் ஒரு வருடமாகக் குறைந்துள்ள நிலையில், முட்டைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை ஒப்பிடுகையில் குறையவில்லை.அதன்படி கேக், முட்டை ரொட்டி, உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று டி.ஆர்.அழககூன் தெரிவித்தார். தற்போது முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பண்ணையில் இருந்து ஒரு முட்டை ரூ. 24-25 க்கு சந்தைக்கு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.நாடு தற்போது முட்டை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.