கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருக்கும் வேளையில் திடீரென குண்டு வெடிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் பாகிஸ்தானின் பக்துன்கவா மாகாணத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியொன்றின்போது இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென அங்கு குண்டு வெடிக்கப்பட்டுள்ளது.
எனினும் குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் போட்டியில் குண்டு வெடிப்பு; ஒருவர் பலி - பலர் காயம் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருக்கும் வேளையில் திடீரென குண்டு வெடிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் பாகிஸ்தானின் பக்துன்கவா மாகாணத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியொன்றின்போது இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென அங்கு குண்டு வெடிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிக்கப்பட்டதுடன் அங்கிருந்தவர்கள் அங்குமிங்குமாக பரபரப்புடன் ஓட ஆரம்பித்துள்ளனர். எனினும் குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.