• Sep 07 2025

3500 கிலோகிராம் கழிவு தேயிலைகளுடன் இருவர் கைது

Chithra / Sep 7th 2025, 3:15 pm
image

அனுமதிப்பத்திரமின்றி 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை கொண்டு சென்ற இருவர் இன்று காவை ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை - வெலம்பொட பிரதேசத்தில் இருந்து தலவாக்கலை நகருக்கு லொறியொன்றில் கழிவு தேயிலையை கொண்டு செல்வதாக ஹட்டன் ஊழல் தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த லொறியினை நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 3500 கிலோகிராம் கழிவுத் தேயிலை லொறியில் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து இக் கைது இடம்பெற்றுள்ளது

மேலதிக விசாரணையின்  பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

3500 கிலோகிராம் கழிவு தேயிலைகளுடன் இருவர் கைது அனுமதிப்பத்திரமின்றி 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை கொண்டு சென்ற இருவர் இன்று காவை ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கம்பளை - வெலம்பொட பிரதேசத்தில் இருந்து தலவாக்கலை நகருக்கு லொறியொன்றில் கழிவு தேயிலையை கொண்டு செல்வதாக ஹட்டன் ஊழல் தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த லொறியினை நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 3500 கிலோகிராம் கழிவுத் தேயிலை லொறியில் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து இக் கைது இடம்பெற்றுள்ளதுமேலதிக விசாரணையின்  பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement