• Sep 07 2025

இலங்கையில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள் இரசாயனங்கள்: விசாரணைகள் தீவிரம்

Chithra / Sep 7th 2025, 1:18 pm
image

தங்காலை, நெடோல்பிட்டிய பகுதியில் உள்ள காணியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு தொகை இரசாயனம் இன்று  காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதி மக்கள் வழங்கிய தகவலின் படி தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன்று காலை நாடோல்பிட்டியவில் உள்ள காணியில் நடத்திய சோதனையின் போது, இந்த இரசாயனம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்த காணியில் வெள்ளை நிற இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த இரசாயனங்கள் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயனமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 

நேற்று மித்தெனியவில் உள்ள தலாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்களுடன் ஒத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த இரசாயனங்களை யாரோ ஒருவர் இந்த இடத்தில் கொண்டு வந்து கொட்டியதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைக்காக இந்த இரசாயனங்கள் இன்று பிற்பகல் தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள் இரசாயனங்கள்: விசாரணைகள் தீவிரம் தங்காலை, நெடோல்பிட்டிய பகுதியில் உள்ள காணியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு தொகை இரசாயனம் இன்று  காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் வழங்கிய தகவலின் படி தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன்று காலை நாடோல்பிட்டியவில் உள்ள காணியில் நடத்திய சோதனையின் போது, இந்த இரசாயனம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த காணியில் வெள்ளை நிற இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த இரசாயனங்கள் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயனமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். நேற்று மித்தெனியவில் உள்ள தலாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்களுடன் ஒத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த இரசாயனங்களை யாரோ ஒருவர் இந்த இடத்தில் கொண்டு வந்து கொட்டியதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைக்காக இந்த இரசாயனங்கள் இன்று பிற்பகல் தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement