இலங்கை மின்சார சபை அடுத்த கட்டண திருத்தத்திற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு மத்தியில் சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில், கடந்த வாரம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களின் விபரங்கள் வெளியாகவில்லை
இந்தநிலையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இந்த வாரம் குறித்த முன்மொழிவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்களின்படி, இலங்கை மின்சார சபை 6.8 வீத மின் கட்டண அதிகரிப்பை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம் - வெளியான தகவல் இலங்கை மின்சார சபை அடுத்த கட்டண திருத்தத்திற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு மத்தியில் சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.அந்தவகையில், கடந்த வாரம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களின் விபரங்கள் வெளியாகவில்லைஇந்தநிலையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இந்த வாரம் குறித்த முன்மொழிவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தகவல்களின்படி, இலங்கை மின்சார சபை 6.8 வீத மின் கட்டண அதிகரிப்பை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.