• Nov 26 2024

வவுனியாவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மழைக்கு மத்தியில் ஆரம்பம்

Tharmini / Nov 25th 2024, 11:11 am
image

க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று (25) ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில்  வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு, இன்று (25)  பரீட்சைசெயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது. 

இம்முறை உயர்தரபரீட்சைக்கு வவுனியாவில்2420 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்களுக்காக20 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கடும்மழை பெய்து வருகின்றது.

இதனால் பரீட்சை நிலையத்திற்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை இம்முறை உயர்தரபரீட்சையில் நாடளாவிய ரீதியில்  மூன்றுஇலட்சத்து 33,185பேர் தோற்றவுள்ளனர். 

அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

வவுனியாவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மழைக்கு மத்தியில் ஆரம்பம் க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று (25) ஆரம்பித்துள்ளது. அந்தவகையில்  வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு, இன்று (25)  பரீட்சைசெயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது. இம்முறை உயர்தரபரீட்சைக்கு வவுனியாவில்2420 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்களுக்காக20 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கடும்மழை பெய்து வருகின்றது. இதனால் பரீட்சை நிலையத்திற்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதுஇதேவேளை இம்முறை உயர்தரபரீட்சையில் நாடளாவிய ரீதியில்  மூன்றுஇலட்சத்து 33,185பேர் தோற்றவுள்ளனர். அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement