• Sep 19 2024

கிராம சேவையாளர்களை பொலிஸார் காட்டிக்கொடுக்கின்றனர் -கிராம அலுவலர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 6:09 pm
image

Advertisement

யாழில் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களை பொலிசாருக்கு வழங்கும்போது வழங்கிய கிராம சபையாளரின் பெயரை சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு பொலி சார் வழங்குவதாக கிராம  அலுவலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை க யாழ். மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற யாழ் மாவட்ட கிராம அலுவலர்களுக்கும் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.



அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிராமத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை கிராம சேவையாளர்கள் பொலிசாருக்கு வழங்குகின்றனர்.

வழங்கும்போது  தகவல் வழங்கும் கிராம சேவையாளரின் பெயரை சட்டவிரோதா செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வழங்கிய சில மணித்தியாலங்களுக்குள்  பொலிசார் ஊடாக அறிந்து கொள்கிறார்கள்.



யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் தொடர்கிறது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய கிராம மட்டத்தில் இருக்கும் நபர்களின் பெயர் விபரங்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்குகிறோம்.

தகவலை வழங்கிய பின்னர் சில மணித்தியாலங்களில் எந்த கிராம சபையாளர் யாருடைய பெயரை கொடுத்தார் என்ற விவரம் சந்தேக நபர்களிடம் செல்கிறது.

குறித்த தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிசாருக்கு வழங்கும் போது அதனை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு இவர்தான் கூறினார் என தெரிவிக்கிறார்கள்.

இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் கிராம சபையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடும் நிலை உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் எனக்கு விவரங்களை அனுப்புங்கள் அல்லது உங்கள் பிரதேச செயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.


கிராம சேவையாளர்களை பொலிஸார் காட்டிக்கொடுக்கின்றனர் -கிராம அலுவலர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு samugammedia யாழில் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களை பொலிசாருக்கு வழங்கும்போது வழங்கிய கிராம சபையாளரின் பெயரை சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு பொலி சார் வழங்குவதாக கிராம  அலுவலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.நேற்று வெள்ளிக்கிழமை க யாழ். மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற யாழ் மாவட்ட கிராம அலுவலர்களுக்கும் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிராமத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை கிராம சேவையாளர்கள் பொலிசாருக்கு வழங்குகின்றனர்.வழங்கும்போது  தகவல் வழங்கும் கிராம சேவையாளரின் பெயரை சட்டவிரோதா செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வழங்கிய சில மணித்தியாலங்களுக்குள்  பொலிசார் ஊடாக அறிந்து கொள்கிறார்கள்.யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் தொடர்கிறது.குறித்த சம்பவங்கள் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய கிராம மட்டத்தில் இருக்கும் நபர்களின் பெயர் விபரங்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்குகிறோம்.தகவலை வழங்கிய பின்னர் சில மணித்தியாலங்களில் எந்த கிராம சபையாளர் யாருடைய பெயரை கொடுத்தார் என்ற விவரம் சந்தேக நபர்களிடம் செல்கிறது.குறித்த தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிசாருக்கு வழங்கும் போது அதனை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு இவர்தான் கூறினார் என தெரிவிக்கிறார்கள்.இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் கிராம சபையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடும் நிலை உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் எனக்கு விவரங்களை அனுப்புங்கள் அல்லது உங்கள் பிரதேச செயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement